முதல்முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் கொலை – மகன் வெளியிட்ட பரபரப்புத் தகவல்

0

எகிப்து நாட்டில் மன்னராட்சி நடந்துவந்த நிலையில் ஜனநாயக முறைப்படி முதல் முறையாக தேர்தல் நடைபெற்று மக்களால் அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் 67 வயதான முகமது மோர்சி ஆவார்.


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

முகமது மோர்சி அதிபராக இருந்த போது, பதவி விலக கோரி எகிப்தில் கடுமையான போராட்டம் நடைபெற்றது வந்தது. அவர் பதவி விலக மறுக்கவே இதனயயடுத்து கடந்த மாதத்தில் அந்நாட்டு ராணுவம் அவரை வலுக்கட்டாயமாக அதிபர் பதிவிலிருந்து நீக்கம் செய்தது.

முகமது மோர்சி அதிபராக இருந்த போது அவர் பதவி விலக கோரி அதிபர் மாளிகையின் முன்பு போராட்டம் நடத்தியவர்களை கொன்றதற்க்காக அவருக்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து எகிப்து நீதிமன்றம், மேலும் அவர் மேல் பல வழக்குகள் நிலுவையில் இருந்த வந்த நிலையில், அந்த வழக்குகளின் விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்தநிலையில், வழக்கு ஒன்றின் விசாரணைக்காக முகமது மோர்சி கடந்த திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரை நீதிபதிகள் விசாரித்த போது பதிலளித்த அவர் தம்மிடம் பல ரகசியங்கள் இருப்பதாகவும் அதை வெளியிட்டால் எகிப்து நலனுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்து பேசி கொண்டிருந்த நிலையில் திடீரென மயக்க நிலையில் நிலை தடுமாறி கீழே மயங்கி விழுந்தார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.எனினும் முகமது மோர்சி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில்.


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மோர்சியின் மகன் அப்துல்லா தன் தந்தையின் மரணம் திட்டமிட்ட படுகொலை என குற்றம் சாட்டி உள்ளார். இதுசம்மந்தமாக அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் எகிப்து அரசும், தற்போதைய அதிபர் அப்துல் பத்தா எல் சிசியும் தனது தந்தையின் மரணத்திற்கு காரணம் என அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

மேலும் தற்போதைய அதிபர் மற்றும் முன்னாள் உள்நாட்டு வளர்ச்சிக்கான அமைச்சர் முகமது தவ்பீக் உள்ளிட்டவர்களே தனது தந்தையின் மரணத்திற்கு முழு காரணம் எனவும், மோர்சியின் மரணம் அப்பட்டமான படுகொலை எனவும் அப்துல்லா தெரிவித்துள்ளார், மோர்சியின் மகனான அப்துல்லாவின் குற்றச்சாட்டு எகிப்து அரசியலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here