இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்று தான் கூறவேண்டும், அதே சமயம் ஸ்மார்ட்போன் நிறுவனம் எந்த அளவிற்கு வளர்கின்றதோ, அதேபோன்று ஸ்மார்ட்போன்களின் திருட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி செண்டரல் எக்யூப்மெண்ட் ஐடண்ட்டி ரெஜிஸ்டர் என்ற டேட்டாபேஸை ஐ.எம்.இ நம்பர் அடிப்படையில் தொலைத்தொடர்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த டேட்டாபேஸ் முறையாக முழுவதும் முடிக்கப்பட்ட பின்னர் செல்போன்களை தொலைத்தவர்கள் தொலைத்தொடர்பு அமைச்சரகத்தின் உதவியின் மூலம் விரைவில் திரும்பி பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.