Kalavani 2 Movie Release Date Announced | களவாணி படத்தின் 2 ஆம் பாகம் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

0

விமல் மற்றும் ஓவியா நடித்து மாபெரும்
வெற்றி பெற்ற களவாணி படத்தின் 2ம் பாகம் ரிலீசுக்கு ரெடியாகி 4 மாதங்கள் ஆகிறது. ஆனால் பல பிரச்னைகள் காரணமாக படம் வெளியீட்டுத்தேதியை தள்ளி போட்டுக்கொண்டே வந்தனர் வினியோகஸ்தர்கள்.


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

களவாணி படத்தை தயாரித்த நாசீர் அதன் இரண்டாம் பாகத்தையும் தயாரிப்பதாக அறிவித்தார். ஆனால் வேறு இயக்குனர், நடிகர் மற்றும் நடிகைகள். அதே நேரத்தில் இயக்குனர் சற்குணம் களவாணி படத்தை தொடங்கினார்.படத்தை விமல் தயாரிப்பதாக முதலில் அறிவிப்புகள் வெளிவந்தது. ஆனால் இடையில் திடீரென தயாரிப்பாளர் விமல் அல்ல இயக்குனர் சற்குணம் என்று கூறினார்கள். இந்த நேரத்தில் விமல் நடித்து தயாரித்த மன்னர் வகையறா படத்திற்கு கடன் கொடுத்த விநியோகஸ்தரான சிங்காரவேலன், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க அடுத்த பிரச்சினை உருவானது. அதன் பிறகு சிங்காரவேலனும், விமலும் தங்களுக்குள் சமரசம் செய்து கொண்டனர்.


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அதன் விவரம்: சிங்காரவேலனுக்கு கொடுக்க வேண்டிய கடனுக்கு அவர் தயாரிப்பில் விமல் படம் நடித்து கொடுக்க வேண்டும். இப்படி பல பிரச்சினைகளை கடந்து ஒரு வழியாக படம் அடுத்த மாதம் (வருகிற ஜூலை) 5 ஆம் தேதி வெளியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here